பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2015

கண்டிப்பா வருவேன்! அடம்பிடிக்கும் சிம்பு!



சிம்புவுக்கு இது போறாத காலமாக இருக்கிறது. வாலுவுக்கு பிறகு சிம்பு மிகவும் நம்பியிருக்கும் திரைப்படம் கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா. அதையடுத்து செல்வராகவனின் ‘கான்’. இந்த இரண்டு படங்களும் சிம்புவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடப்பதெல்லாம் அவருக்கு எதிராக இருக்கிறது. 



கௌதம் மேனன் படத்திற்கு கடைசி பாடல் ஒன்றின் ஷூட்டிங் மட்டும் பாக்கி இருக்கும் சமயத்தில் ஏற்பட்டுவிட்டது அந்த சோகம். ஏதோ ஒரு பூச்சி சிம்புவைக் கடித்து வைக்க, சோதித்துப் பார்த்த டாக்டர்கள் கண்டிப்பாக ஷூட்டிங் செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார்களாம். ஆனால் படத்தின் மீதும், தயாரிப்பாளரின் நலனிலும் அக்கறை கொண்ட சிம்பு நான் நடித்துகொடுத்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாராம். 

சிம்பு ஏன் இவ்வளவு அடம்பிடிக்கிறார் என்று திரையுலகம் குழப்பத்தில் இருக்கும்போது தான், செல்வராகவனின் ’கான்’ திரைப்படம் ட்ராப் செய்யப்படலாம் என்ற அறிவிப்பு வெளியாகியது. பணப்பிரச்சனை காரணமாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தயாரிக்கும் இத்திரைப்படம் ட்ராப் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி சிம்புவை ரொம்பவும் அப்செட் செய்திருக்கிறதாம். எனவே தான் தாமதம் செய்யாமல் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தை முடித்துக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் சிம்பு