பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

அமைச்சர் ராஜித குடும்பத்திற்கு விடுதலை

வயது குறைந்த சிறுமியை கடத்தி வந்து, பலாத்காரமாக வீட்டில் தங்க வைத்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவரது புதல்வர்கள் எக்சத் சேனாரத்ன
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன மனைவி டொக்டர் சுஜாதா சேனவிரத்ன ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இதனை அறிவித்தார்.
சிறுமியின் பெற்றோரால் முன்வைக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் மூலம் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இவ்வழக்கை தொடர்ந்தே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
தான் இன்னும் இரு வாரங்களில் சட்டபூர்வமான வயதை அடையவுள்ளதாக குறித்த சிறுமி நீதிமன்றில் தெரிவித்ததோடு, தனது பெற்றோருடன் வாழ விருப்பமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.