பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2015

தந்தையார் இறந்ததினால் மன விரக்திக்கு உள்ளாகியிருந்த குடும்பப் பெண் தற்கொலை


 செய்து கொண்ட சம்பவம் உடுவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை 5.00 மணியளவில் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலம் உறவினர்களினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த 33 வயதான கிருபாகரமூர்த்தி ராஜநந்தினி என்பவராகும்.
நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்க் கொண்டுள்ளார்கள்.