பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2015

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சம்பந்தன் எப்படி வந்தார்? படையினரை குடைந்தெடுக்கும் மேலதிகாரிகள்

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் எப்படி வந்தார், துப்பாக்கிகளை எதற்காக வைத்திருக்கறீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்றமை தொடர்பாக படையினர் மேலதிகாரிகளால் குடைந்தெடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி யாழ்.வந்த எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சென்றிருந்ததுடன், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தார்.
இதன் பின்னர் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த படையினர் மீது கடுமையான விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இதன்போது பொலிஸார் தான் கூட்டி வந்தனர் எனவும் உள்ளே வந்த பிறகே தமக்கு விடயம் தெரியும் எனவும் படையினர் கூறியிருக்கும் நிலையில், துப்பாக்கிகளை எதற்காக வைத்திருக்கிறீர்கள் என படையினரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழையும் பாதைகளுக்கு இரு வரியல்கள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.