பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2015

முதலமைச்சரை தனிப்பட்ட வகையில் சந்தித்தார் முன்னாள் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம்


இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழ்ப்பாணம்
சென்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பயணம் குறித்து இலங்கைக்கான இந்தியாவின் யாழ் துணைத்தூதரகம் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை... இந்த பயணம் அவரது தனிப்பட்ட பயணம் எனவும், பயணத்திற்கான காரணம்  இன்னும் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனை  தனிப்பட்ட வகையில்  முன்னாள் இந்திய அமைச்சர் பாசிதம்பரம் சந்தித்துள்ளார். பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றனது. னினும் இது குறித்து முதலமைச்சரின் அலுவலகம் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை... என்பதோ இந்தியாவின் துணைத் தூதரகமும் முன்னாள் அமைச்சர் பா. சிதம்பரத்தின் பயனம் குறித்து மௌனம் காக்கிறது...