பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2015

கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: வைகோ



மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம் என்ற பெயரில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமை தொடக்கினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. காஞ்சிபுரம், வாலாஜாபாத், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அவர் பேசினார்.

2-வது நாள் பயணமாக இன்று 4.10.2015 மாலை திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளி்டட பகுதிகளில் பேசினார். மாமல்லபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’4 கட்சிகள் கொண்ட கூட்டியக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. திட்டமிட்டபடி திங்கள்கிழமை திருவாரூரில் அரசியல் கட்சி கூட்டணியாக அறிவிக்கப்படும்.

இந்த கூட்டணி 2016 சட்டப்பேரவை தேர்தலுக்காக மட்டும் அமைந்த கூட்டணி அல்ல. மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்க்க ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு’’ என்றார்.