பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2015

சுவிஸ் பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்

tgte














சுவிசில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் அதிகளவிலான தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
எதிர்வரும் 18ம் நாள் இடம்பெறவுள்ள இப்பொதுத் தேர்தலில், சோசலிச ஜனநாயக கட்சி சார்பாக ஈழத்தவரான தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் போட்டியிடுகின்ற நிலையில், நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் இந்த அறைகூவலை விடுத்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் இடம்பெறுகின்ற உள்நாட்டுத் தேர்தல்களில், அந்தந்த நாடுகளினால் வழங்கப்பட்டுள்ள வாக்குரிமைககளை பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் தீர்மானமொன்று, நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏலவே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சனாநாய வழிமுறை தழுவிய இன்றைய ஈழவிடுதலைப் போராட்டத்தின்; மென்வலுவில், புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற தமிழர்களின் வகிபாகம் முக்கியமான ஒன்றாக உள்ள நிலையில், அந்தந்த நாடுகளில் இடம்பெறுகின்ற தேர்தல்களில் பங்கெடுப்பதானது தமிழர்களின் சமூக அரசியல் அடையாள இருப்புக்கு வலுவுள்ளதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.