பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2015

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை

தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த  நோதிநாதன்  சீகரன் 192 புள்ளிக்களைப்
பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் குறித்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  இவரை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.