பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2015

விரிவுரையாளராவதே எனது இலக்கு!- வவுனியாவில் முதல் நிலை மாணவி ஹரிணி பரந்தாமன்

விரிவுரையாளராவதே எனது இலக்கு என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை பெற்ற மாணவி ஹரிணி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
வெற்றி குறித்து மாணவி தெரிவிக்கையில்,
நான் மாவட்டத்தில் முதல் நிலை வரவேண்டும் என்ற எண்ணத்துடன் கடுமையாக படித்திருந்தேன். அதற்கு எனது அம்மா, அப்பா, அதிபர், ஆசிரியர்கள் நல்ல பக்கபலமாக இருந்தார்கள்.
பெறுபேறு வந்தவுடன் எனது கனவு நனவாகுமா என்ற எதிர்பார்ப்புடனும் ஒரு வகை பயத்துடனும் பெறுபேற்றைப் பார்த்தேன்.
நான் முதல் நிலை பெற்றிருந்தது தெரியவந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன சொல்வதென்றே புரியல.
நான் எதிர்காலத்தில் ஒரு விரிவுரையாளராக வரவேண்டும் இதுவே எனது இலக்கு என்கிறார் அம் மாணவி.
2ம் இணைப்பு
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி 1ம், 2ம், 3ம், 4ம் நிலைகளைப் பெற்று சாதனை
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளது.
இப் பாடசாலையில் கல்வி கற்ற 76 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் மாவட்டத்தின் முதல் மூன்று நிலைகள் உட்பட முதல் பத்துக்குள் 7 மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அந்தவகையில், முதலாம் நிலை ஹரிணி பரந்தாமன் (188 புள்ளி), இரண்டாம் நிலை அமல்ராஜ் மதுரன் (187 புள்ளிகள்), மூன்றாம் நிலை கர்ணி சுரேஸ் (186 புள்ளிகள்), நான்காம் நிலை லிங்கநாதன் அகர்ஷன் (185 புள்ளிகள்), ஏழாம் நிலை யேசுநேசன் சதுர்சிகன் மற்றும் பிரணவி சஞ்சீபன் (182 புள்ளிகள்), ஒன்பதாம் நிலை பரமானந்தன் நிகேஷன் (181 புள்ளிகள்) என இப் பாடசாலை மாணவர்களின் சாதனை தொடர்கிறது.