பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

பிரான்சை உலுக்கிய மிகப்பெரிய சாலை விபத்து

bor.jpg!
 
பிரான்சில் நடந்த சாலை விபத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர். 1982 -ம் ஆண்டுக்கு பிறகு பிரான்சில் நடந்த மிகப் பெரிய சாலை
விபத்து இதுவாகும்.
பிரான்சின் தென்மேற்கு பகுதியில்  போர்டோ  நகரத்தின் அருகே இன்று அதிகாலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலா பேருந்து மீது மரம் ஏற்றிச் சென்ற ட்ரக் மோதிய வேகத்தில், இரு வாகனங்களும் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளன.
இதில், பேருந்தில் இருந்த 41 பேர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 9 பேர் போர்டியாக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பெடிட் பெலாஸ் என்ற சிறிய நகரத்தை சேர்ந்த சில முதியவர்கள் பக்கத்து நகரத்துக்கு சுற்றுலா பேருந்தில் சென்றபோது இந்த விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
ஆனால் ட்ரக் டிரைவர் உயிர் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த 1882-ம் ஆண்டு பிரான்சில் நடந்த ஒரு விபத்து ஒன்றில் 52 பேர் பலியாகினர். அதற்கு பின், இந்த நாட்டில் நடந்த  மிகப் பெரிய விபத்து இதுதான்.