பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2015

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு இன்றும் மஹிந்தவுக்கு அழைப்பு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊடகமொன்றை தனது பிரச்சார நடவடிக்கைக்குப் பயன்படுத்தி, அதற்கு நிதி வழங்காமை தொடர்பில் விசாரணை செய்வதற்கே அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த், சரித்த ஹேரத், அனுர சிறிவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மஹிந்த ராஜபக்ச பாரிய ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகிய போதும் குறித்த ஆணைக்குழு தொடர்பிலான சட்டப் பிரச்சினையை அவரின் சட்டத்தரணிகள் ஏற்படுத்தியதனால் விசாரணை இன்று தள்ளிப்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சட்டத்தரணிகளினால் வெளியிடப்பட்ட எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சட்டத்தரணிகள் நேற்று எதிர்ப்பை வெளியிட்டியிருந்தனர்.
இந்த எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.