பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2015

ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக் கோரி  தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 
அனுப்பப்பட்டது. ஆர்.கே.நகரில் சுரேஷ் என்பவர் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு தொடங்கப்பட்டது. வேட்பு மனு சரியாக முன்மொழியப்படவில்லை எனக் கூறி அதிகாரி தள்ளுபடி செய்தார். தமது மனுவை முறையாக பரிசீலிக்கவில்லை என சுரேஷ் தாக்கல் செய்து மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் செல்லாது என அறிவிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். மேலும் விசாரித்த பின்னர் மனுவுக்கு ஜெயலலிதா தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.