பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2015

மதுரை அகதி முகாமில் உள்ள இலங்கைப் பெண் மாயம்


தமிழகத்தின் மானாமதுரையில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் மாயமானது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை மூங்கில் ஊருணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ரவி நிரோஷா என்ற இளம் யுவதியே காணமல்போயுள்ளார்.
குறித்த யுவதி மதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்ற நிரோஷா வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மானா மதுரை காவல் நிலையத்தில் அவருடைய தந்தை முறைப்பாடு செய்தார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நிரோஷாவை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.