பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2015

எங்கள் அடிகள் மிகக் கவனமாக எடுத்து வைக்கப்படுகின்றன: திருவாரூரில் வைகோ பேட்டி



மக்கள் நல கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் 5.10.2015 திங்கள் அன்று காலை நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், மக்கள் நல கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செயல்படுவார் என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.