பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2015

வடக்கில் லஞ்சம் பெற்ற கலால்வரி ஆணையாளர் கைது


வவுனியாவிலுள்ள மதுபானசாலையொன்றில் லஞ்சம் பெற முயற்சித்த வட மாகாண உதவி கலால்வரி ஆணையாளர் கிஸ்ரி ஜோசப், லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மதுபானசாலையிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் லஞ்சம் கோரியுள்ளதாகவும், அதில் இரண்டாம் பகுதியான 60 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.