பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2015

திமுத் கருணாரத்னவின் சதத்தின் உதவியுடன் இலங்கை திடமான நிலையை நோக்கி

மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதலாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.
 
இதில் திமுத் கருணாரத்ன 135 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 72 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.
 
காலியில் நடைபெறும் குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
 
கௌசால் சில்வா 17 ஓட்டங்களுடனும் லஹிரு திரிமான்ன 16 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
 
மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஜெரோமி டெய்லர் மற்றும் டெவந்திர பிஷு, தலா ஒரு விக்கெட்டை பெற்றுக்கொண்டனர். 
 
இலங்கை வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் 02 டெஸ்ட் 03 ஒரு நாள் மற்றும் 02 t20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.