பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2015

ஈ.பி.டி.பி கட்சியின் தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல் வைப்பு

யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கிய ஈ.பி.டி.பி கட்சியின் தொலைக்காட்சி நிலையம் இன்று சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி , வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாலேயே கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகளால் குறித்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சிங்களவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அதிகாரிகள் யாழ் பொலிசாரிடம் கையளித்து உள்ளனர்.