பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2015

6 கைதிகளின் நிலை கவலைக்கிடம் - சிகிச்சை பெற கைதிகள் மறுப்பு


தமது விடுதலையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கைதிகள் தொடர்பான வழக்கில் ஆஜரான சட்டத்தரணி வீ.எஸ்.நிரைஞ்ஜன் தெரிவித்தார்.
சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த போதே தன்னால் இதனை கண்டுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 6 கைதிகளையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ள போதிலும், கைதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த உண்ணாவிரத போராட்டம் தொடரும் பட்சத்தில் அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட கூடிய சாத்தியகூறுகள் தென்படுவதாக சட்டத்தரணி அச்சம் வெளியிட்டார்.
இதேவேளை, எவ்விதமான மருத்துவ உதவிகளையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என எழுத்துமூலமான கடிதமொன்றை சிறைச்சாலை அதிகாரிகளிடம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த 6 கைதிகளுக்கும் இன்று வலுகட்டாயமாக சிகிச்சை அளிக்கப்படும் என சிறை அதிகாரிகள் குறிப்பிட்டதாக கைதிகள் தொடர்பான வழக்கில் ஆஜரான சட்டத்தரணி வீ தெரிவித்தார்.