பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2015

கொழும்பு - கண்டி அதிவேக வீதி விரைவில் நிறைவு பெறும்: லக்ஷ்மன் கிரியெல்ல


கொழும்பு - கண்டி அதிவேக வீதியின் நிர்மானப்பணிகள் அடுத்த வருட பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி குண்டசாலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை கண்டி பகுதியில் நிர்மாணிக்கப்படும் வீதிகளில் 65 வீதமானவை நிறைவு பெற்றுள்ளன. அடுத்து வரும் மூன்று வருடங்ளில் 35 வீதமான நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுமாறு நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார்.
கடந்த மஹிந்த அரசாங்கம் வீதி நிர்மாணப் பணிகள் அதிக அக்கறை காட்டியனது. எனினும் இதில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.