பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2015

சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளார் சரத் பொன்சேகா! நீதிமன்றம் தீர்ப்பு


கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியிலிருந்து, மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டமை, சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மேல் மாகாண சபை உறுப்பினர் அசோகா தயாரத்ன, தெற்கு மாகாண சபை உறுப்பினர் பத்மசிறி டி சில்வா மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் மல்ஹமி ரத்நாயக்க ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இவர்கள் கட்சி எடுத்த முடிவினை புறக்கணித்தமையால் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு தமது ஆதரவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.