15 கோடி தராவிட்டால் குண்டு வைப்பதாக மிரட்டல்: சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் போலீசில் புகார்
ரூபாய் 15 கோடி பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாகவும், தராவிட்டால் குண்டு வைக்கப்போவதாக மர்ம நபர்கள் போனில் மிரட்டல் விடுத்ததாகவும், சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் தியாகராய நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.