உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்க அங்கீகாரம்
உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனையின் படி உள்ளுராட்சி விசேட சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார்.