பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2015

அதிக ஒலி எழுப்பும் வாகனக் குழல்களை அகற்ற நடவடிக்கை

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாளை தொடக்கம் அவ்வாறான வாகன ஊது குழல்களை அகற்றவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காவல்துறை, மோட்டார் வாகன திணைக்களம், கைத்தொழில் தொழினுட்ப நிறுவனம் ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார்