பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2015

அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடம

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்  மயக்கமுற்ற நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொது மன்னிப்பு வழங்கி தங்களை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 217 பேர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே வெலிக்கடை சிறையிலுள்ள தமிழ்க் கைதி ஒருவர் உடல் சோர்வுற்று மயக்கமடைந்ததை தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தமிழ்க் கைதியின் பெயர், விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் அவர் கடந்த 10 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு சாகும் வரையான உண்ணாவிரதத்தில் மூன்றாவது நாளாகவும் இன்றைய தினம் தொடர்கின்ற நிலையில் தொடரும் பலர் உடல்சோர்வுற்ற நிலையில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகிறது