பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2015

அரசின் அனுமதியுடன் ஊக்கமருந்து: ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை?

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும்
என்று தெரிகிறது.
கடந்த 2001 முதல் 2012ம் ஆண்டு வரை நடந்த ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகளிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவு கடந்த மாதம் வெளியாகியது.
இதில் ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள் அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது நிரூபணம் ஆகியுள்ளது.
மேலும், கடந்த 11 ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த 80 சதவீத பேர் சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஊக்க மருந்து சோதனை மையத்தின் (டபுள்யு.ஏ.டி.ஏ) தலைவர் ரிச்சர் பவுண்டு கூறுகையில், "இது மிகவும் பயங்கரமாக உள்ளது.
அரசின் அனுமதி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. உடனடியாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் ரஷ்யா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த வார இறுதிக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவர் சபாஸ்டியன் கோ கோரியுள்ளார்.