பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2015

யாழ் பிரபல பாடசாலை அருகில் மடக்கிப் பிடிபட்ட விபச்சார விடுதி, கதறி அழுத யுவதி

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் சாரங்கா நகைமாடத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயற்பட்டு வந்து வந்த விபச்சார விடுதி இன்று காலை அப் பகுதி
இளைஞர்களாலும் சுற்றிவளைக்கப்பட்டது.
குறித்த விபச்சார விடுதி பல நாட்களாகத் தொழிற்பட்டு வந்ததாக பலரும் முறைப்பாடுகள் தெரிவித்திருந்தனர். இந்த விடுதி ஒரு நகைக்கடை முதலாளிக்குச் சொந்தமானதாகும். அவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என இளைஞர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதி காலையி்ல் சுற்றிவளைக்கப்பட்ட போது அந்த விடுதியில் இருந்த சந்திரசேகரம் கோபி என்ற பெயருள்ள அடையாள அட்டை இலக்கம் 821481600V, மகேசன்வீதி நவாலியைச் சேர்ந்த இளைஞனும் உடுவில் தெற்கைச் சேர்ந்த 21 வயதாக யுவதியும் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டனர்.
குறித்த யுவதி இளைஞர்களின் கால்களில் வீழ்ந்து கதறியதாகவும் தெரியவருகின்றது. குறித்த இளைஞன் பல இளம் யுவதிகளை அதிகாலை வேளையில் அங்கு அழைத்து வந்து தனது இச்சைகளைத் தீர்த்து வந்ததாகவும் தெரியவருகின்றது. அத்துடன் மேலும் பல இளைஞர்களும் அங்கு யுவதிகளைக் கூட்டி வந்து துர் நடத்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
யாழில் விபச்சாரம் இடம்பெறுவதாகக் கூறி விடுதியை முற்றுகையிட்ட இளைஞர்கள்.
யாழ்.இந்துக்கல்லூரி சுற்று வட்டத்திற்கு எதிரே உள்ள “லாண்ட் மார்க்” விடுதியில் விபச்சாரம் இடம்பெற்றதாக கூறி அப்பகுதி இளைஞர்களும், தமிழ்த் தேசியப் பண்பாடுப் பேரவையினரும் இணைந்து ஒரு ஆணையும் பெண்ணையும் கையும் மெய்யுமாக பிடித்த சம்பவம் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞர், யுவதியிடம் விசாரித்த போது தாங்கள் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வருவதாகவும், அதனால் தான் தனிமையில் சந்தித்து வருவதாகவும் கூறினார்கள். அங்கிருந்த இளைஞர்களிடம் தாங்கள் இருவரும் திருமணம் செய்வதாகவும், தங்களது விபரங்களையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு அங்கிருந்து தப்பியோடினார்கள். ஆயினும் குறித்த இளைஞன் நான்கு தடவைகளுக்கு மேல் வெவ்வேறு யுவதிகளுடன் இதே லாண்ட்மார்க் விடுதியில் தங்கிச் சென்றதாக அப்பகுதி இளைஞர்களும், அயலவர்களும் தெரிவித்தார்கள்.
இன்று காலை 6 மணியளவில் குறித்த யுவதியுடன் இளைஞன் லாண்ட் மார்க் ஹொட்டலில் அறையொன்றை பதிவு செய்து தங்கினார். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்களும், அயலவர்களும், கடைக்காரர்களும் சேர்ந்து தமிழ்த் தேசியப் பண்பாடுப் பேரவையினரின் உதவியுடன் குறித்த விடுதியை முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற எமது ஊடகவியலாளருக்கு லாண்ட்மார்க் ஹோட்டலின் கீழே உள்ள கணினி மற்றும் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் இருந்து வெளிவந்த நபர் ஒருவர் இது சாரங்கா நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான கட்டிடம் என்றும் அதனை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள சகோதரர் ஒருவர் நடத்துவதாகவும் கூறினார்.
பின்னர் எமது ஊடகவியலாளர் சிங்கள சகோதரருடன் பேசும் போது அவரும் அதனை ஒத்துக் கொண்டார்.
தானே விடுதி உரிமையாளர் எனக் கூறிய சிங்கள சகோதரர். இது தொடர்பில் சாரங்கா நகைக்கடை உரிமையாளர் சிவபாஸ்கரனிடம் கேட்ட போது,
STS Technologic என்ற பெயரில் கணினி உதிரிப் பாகங்களை விற்பனை செய்து வரும் சின்னத்தம்பி சதீஸ் என்பவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே சட்ட ரீதியாக STS Technologic இயங்கி வரும் அந்தக் கடையினையும், அதன் மேற் பகுதியான லாண்ட்மார்க் ஹொட்டல் இயங்கிவரும் கட்டிடத்தினையும் மாதாந்த வாடகைக்கு முற்பணம் பெற்றுக் கொண்டு கொடுத்திருத்தேன்.
STS Technologic கடையின் உரிமையாளர் சின்னத்தம்பி சதீஸ் என்பவருடன் நான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டிடத்தில் ஏற்படுகின்ற சேதங்களுக்கும், வியாபாரத்தினால் ஏற்படுகின்ற விளைவுகளுக்கும் சின்னத்தம்பி சதீஸே பொறுப்பு என்றும் ஒப்பந்தம் கைசாத்திட்டிருந்தோம். ஆகவே, இன்று காலையில் நடந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பும் சின்னத்தம்பி சதீஸ் அவர்களையே சாரும்.
கட்டிடம் என்னுடையது என்பதற்காக அவரின் வியாபார நடவடிக்கைகளால் வரும் விளைவுகளுக்கு என்னால் பொறுப்பேற்க முடியாது. இதனை பகுத்தறிவுள்ள மனிதர்கள் அனைவரும் புரிந்து கொள்வர்.
இதனை விடுத்து பொறுப்புக் கூற முடியாமல் ஒளிந்திருந்து கொண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பிரபல்யமானவர்களைக் குறிவைத்து கற்பனைக்குச் செய்திகளை எழுதிக்கொண்டிருக்கும் இணையத்தளங்கள் துணிவிருந்தால் தங்களை பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொண்டு இவ்வாறான செய்திகளை வெளியிடட்டும் பார்க்கலாம். என்றார்.
கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டது யாழ்ப்பாண சமூகம். விடுதிகளுக்கு அனுமதி வழங்கும் மாநகரசபையின் அறிவுறுத்தலின் படி யாழ்ப்பாண விடுதிகளில் ஒரு ஆணும், பெண்ணும் ஜோடியாக தங்குவதாக இருந்தால் அதற்கு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளது.
இதனை சமூகப் பொறுப்புணர்வுடன் அமுல்படுத்துவது விடுதி நிர்வாகிகளின் கடமை ஆகும்.
போரினால் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டு மீண்டெழும் எமது சமூகம் இவ்வாறான கலாசாரப் பிறழ்வுகளுக்கு உட்படுவதை விடுதி நடத்துனர்கள் நினைத்தால் மாத்திரமே முற்றாகத் தடுக்க முடியும்.
எப்படியேனும் பணம் சம்பாதித்தால் போதும் என்ற சில விடுதி நடத்துனர்களால் எமது பண்பாடு, காலாச்சாரங்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. என்பதையும் இங்கே சுட்டிக் காட்டுகின்றோம். ஆகவே, பொலிஸார் தவறு விடுகின்றவர்களைக் காட்டிலும் அத்தவறு நடத்துவதற்கு வாய்ப்பளிக்கின்ற வர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தங்கிய ஜோடிகளின் பூரணப்படுத்தப்படாத பதிவு அட்டைகள்…Landmark 01Landmarkviduthi 1viduthi 2viduthi3
jaffna now