பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2015

மூதூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பேருந்து சேவை ஆரம்பம்

திருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடிப் பேருந்து  சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சேருவிலையில் முற்பகல் 11 மணிக்கு தயாராகும் பேருந்து, மூதூரிலிருந்து நண்பகல் 12 மணிக்கு பேருந்து சேவையை ஆரம்பிக்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் மூதூர்சாலை முகாமையாளர் ஏ.எல்.நௌபீர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து நண்பகல் ஒரு மணிக்கு மூதூருக்கான பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 350 ரூபா போக்குவரத்து கட்டணத்துடன் சாதாரண சேவை இடம்பெறவுள்ளதாகவும் சாலை முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்