பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2015

பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தின் முன்னால் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்


இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலை, தொடர் இழுபறி நிலையாக நீடித்து வரும் நிலையில், இவ்விவகாரத்தினை மையப்படுத்திய கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் தொடங்கியுள்ளது.
இலங்கையின் சிறைகளில் தமிழ்கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள உண்ணாநிலைப் போராட்டத்துக்கு தோழமையினைத்
தெரிவித்தும், இவ்விவகாரத்தினை அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பொருட்டும் இப்போராட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்துக்கு முன்னால் நவம்பர் 16 திங்களன்று தொடங்கியுள்ள இக்கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவை உறுப்பினர் திருக்குமரனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை நவம்பர் 18ம் நாளன்று ரொரென்ரோவில் உள்ள அமெரிக்க உயர்காரியாலத்துக்கு முன்னால் மதியம் 12 மணி முதலும், அமெரிக்காவின்
நியு யோர்க்கில் உள்ள ஐ.நா பொதுமன்றத்துககு முன்னாலும் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் இடம்பெறுகின்ற இருக்கின்றன.