பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2015

யாழ்.நகரில் பொதிகள் பரிமாற்று சேவை நிலையத்தில் தீ

யாழ்.நகரில் உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் பரிமாற்று சேவை நிலையம் ஒன்றில் தீ விபத்து சம்பவித்த நிலையில், யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவின் துரித செயற்பாட்டினால் தீ பரவுவது தடுக்கப்பட்டு சேதங்களும் தடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
கார்த்திகை தீப திருநாளான இன்றைய தினம் குறித்த நிலையத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த சுட்டி விளக்கே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த விபத்தில் சேதங்கள் பெரியளவில் இல்லை என தெரியவருகிறது.