பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2015

பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரம்


பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் நேற்று நள்ளிரவு வீசப்பட்டுள்ளது.
இந்த துண்டுப் பிரசுரம் விஸ்வமடு, சுண்டிக்குளம் பகுதி A9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது
சுமார் 50 வரையான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாகவும் இதில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 வது பிறந்தநாள் வாழ்த்து என A4 அளவிலான கலர் துண்டுப் பிரசுரமே வீசப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.