பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2015

பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி


பாடகர் கோவனை காவலில் எடுத்து விசாரிக்க தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக அரசு கோவனை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கோவன் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதை பழக்கமாக கொண்டுள்ளார்.
விசாரணையில் அவருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த அடிப்படையிலேயே, சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றம் கோவனை இரண்டு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பிரச்சார பாடகர் கோவனை, கடந்த அக்டோபர் 30-ம் திகதி தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.