பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2015

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்தல்


ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விடே சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.
இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்களநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க