பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2015

பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி : ஈபில் கோபுரம் ஒளியூட்டம் சுவிஸ் பாரளுமன்றின் முன்னேயும் இவ்வாறு கடந்த திங்கள் நடந்த



பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபில் கோபுரம் அந்நாட்டு தேசிய கொடி வண்ணத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த சனிக்கிழமை கலையரங்கம் உட்பட 6 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக ஏராளமானோர் மலர்கள் வைத்தும் மெழுகுவத்தி ஏந்தியும் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் பாரிஸ் நகரில் அடையாளமாக கருதப்படும் ஈபில் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடி வண்ணங்களான சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களால் ஒளியூட்டப்பட்டிருக்கிறது. அங்கு குவிந்த மக்கள் சிறு அளவிலான ஈபில் கோபுரங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.