பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2015

பாராசூட்டில் குதித்த ரஷ்ய விமானத்தின் பைலட்டை சுட்டுக்கொன்ற சிரிய கிளர்ச்சியாளர்கள்: வீடியோ


சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது.
எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர் விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது.
விமானம் தாக்கப்பட்டதும் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் விமானத்தின் அவசரகால வாசல் மூலம் பாராசூட் பயன்படுத்தி தப்பியதாகவும், அவர்களில் ஒருவரை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாகவும் செய்தி பரவிவருகிறது. மேலும் கிளர்ச்சியாளர் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்வதாக காட்டும் நபர், ரஷ்ய ராணுவ வீரர் அணிந்திருக்கும் அதே உடை மற்றும் உபகரணங்களை அணிந்திருப்பதால் சுட்டுக்கொல்லப்பட்டது ரஷ்ய வீரர்தான் என்று கூறப்படுகிறது. மற்றொரு விமானி என்ன ஆனார்? என தெரியவில்லை.