பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2015

நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை: கீதா குமாரசிங்க குற்றச்சாட்டு

முன்னாள் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க இன்று இனவாத அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கருத்து ஒன்றை முன்வைத்தார்.
வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது அவருக்கு 10 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும் அவர் அதற்கு மேலதிகமான நேரத்திற்கு தமது பேச்சை தொடர்ந்தார்.
இதன்போது அவரை கட்டாயமாக அமரவைக்கவேண்டிய நிலை சபைக்கு தலைமை தாங்கியவருக்கு ஏற்பட்டது.
இதன்போது கருத்துரைத்த கீதா குமாரசிங்க, தமது உரை 10 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டபோதும் வடக்கில் இருந்து வரும் தமிழர்களுக்கு மேலதிக நேரங்கள் வழங்கப்படுகின்றன என்று குற்றம் சுமத்தினார்.
தமிழர்கள் என்றால் நீங்கள் 30 நிமிடங்களை வழங்குகின்றீர்கள். எனினும் எங்களுக்கு 10 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதிலிருந்து கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு வழங்கப்படுகின்ற நேர அளவுகள் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.