பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2015

அரசியல் கைதிகள் விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும்

அரசியல் கைதிகளை விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் சூளுரைத்துள்ளார். இன்று  காலை 11.00 மணிக்கு வவுனியா பிரதேச செயலகத்தில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரின் தலைமையில் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான மலசலகூடம் அமைப்பதற்கான காசோலை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எந்தவிதமான விசாரணைகளுமின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை வரும் 07ஆம்  திகதி விடுதலை செய்வதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அவர்களை 07ஆம்  திகதி விடுதலை செய்வதாக இல்லை. மேலும் நேற்று  வடமாகாண சபையில் அரசியல் கைதிகளை எந்தவித காரணமும் கூறாது நல்லிணக்க அடிப்படையில் இந்த அரசு விடுதலை செய்ய வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கையை இந்த நல்லாட்சி அரசு எடுக்காவிட்டால் நாங்கள் கட்டாயமாக எந்த விசாரணையும் இல்லாமல் அநியாயமாக சிறையில் வாடும் எமது சகோதர, சகோதரிகளை விடுதலை செய்வதற்காக நாம் ஒரு பெரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்று நிகழ்வில் உரையாற்றினார்