பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2015

அத்தனையிலும் தங்கம் நவனீதன் புதிய சாதனை

jj_03
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தடகளத் தொடரில் 1500 மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 10 ஆயிரம் மீற்றர் மரதன்
ஓட்டம் என அத்தனை நீண்டதூர ஓட்டங்களிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.நவனீதன்.
குறித்த தடகளத் தொடர் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்டதைப் பிரதிநிதித்துவப்படுத்திய கே.நவனீதன் 1500மீற்றரை 4நிமிடங்கள் 25 செக்கன்கள் 2மில்லி செக்கன்களில் ஓடி முடித்தும், 5 ஆயிரம் மீற்றரை 16நிமிடங்கள் 52 செக்கன்கள் 4 மில்லிசெக்கன்களில் ஓடிமுடித்தும், 10 ஆயிரம் மீற்றரை 36 நிமிடங்கள் 10 செக்கன்கள் 6 மில்லி செக்கன்களில் ஓடி முடித்தும் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார். இதுவரை நடைபெற்று முடிந்த தடகளத் தொடர்களில் எந்தவொரு வீரரும் நீண்ட தூர ஓட்டங்களில் ஒரே தடவையில் நான்கு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியதில்லை.