பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் இணையும் நிமல் சிறிபால?


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்து விட்டு, எதிரணியில் ஆசனம் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பதுளையில் வெளியிட்ட கருத்துகளின் மூலமே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் அமைச்சு பதவிக்கு சத்திய பிரமாணம் வழங்கிய நாளில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளை மாத்திரம் பார்க்க நேரிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தனது கட்சியினர்கள் குறித்து உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என அவர் கூறியுள்ளார்.
எனவே எதிர்வரும் நாட்களில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர், எதிர்கட்சியில் அமர்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.