பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

அரசியல் கைதிகள் 7 பேரே பிணையில் விடுதலை! ஒருவர் அரசியல் கைதி அல்ல


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
10 லட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீர பிணைகளின் கீழ் இவர்கள் கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிராம உத்தியோகத்தரின் பதிவு சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதவான், இவர்களுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நிரந்தர முகவரியில், ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 31 அரசியல் கைதிகளுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 24 பேர்பிணை ஒப்பந்தங்கள் பூர்த்தியான நிலையில் சிறைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி மொத்தமாக 39 அரசியல் கைதிகளுக்கு இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஏலவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று 7 அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
8 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டபோதும், அதில் ஒருவர் அரசியல் கைதி அல்ல என்றும் அவர் கடையுடைப்பு ஒன்று அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர் என்று சிறைச்சாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள், தலா 10 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, கிருஷ்ணகாந்தன் (27) மட்டக்களப்பு, ஆருரன்( பொறியியலாளர்) யாழ்ப்பாணம் உரும்பிராய், கனகசபை தேவதாசன் (58)- கரவெட்டி, தர்சன் குகநாதன்(43) முல்லைத்தீவு, தனயுகன் -யாழ்ப்பாணம், தியாகராஜா பிரபாகரன்(31) மன்னார், யாழ்ப்பாணம் அச்சுவேலி கிராமசேவகர்- மதனசேகரன் (58) ஆகியோர் மெகசீன் சிறையில் உடல் நில பாதிப்படைந்து சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலை மருத்துவமனையில் கிளிநொச்சியை சேர்ந்த 27 வயதான சிவசீலன், 32 வயதான அராலியை சேர்ந்த 32 வயதான புருசோத்தமன் அரவிந்தன் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.