பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2015

கொக்கித் தொடரில் தவறியது வெண்கலம்

41ஆவது சிறந்த தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கொக்கித் தொடரில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் வடமாகாண பெண்கள்
அணி தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்தைக் தவறவிட்டுள்ளது.
கொழும்பு டொறிங்ரன் கொக்கித் திடலில் நேற்றுமுன்தினம் திங்கட் கிழமை இடம்பெற்ற இந்த மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் வடமாகாண பெண்கள் கொக்கி அணியை எதிர்த்து தென் மாகாண பெண்கள் கொக்கி அணி மோதிக் கொண்டது. இதில் தென் மாகாண பெண்கள் கொக்கி அணி 4.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைத்
தன தாக்கிக் கொண்டது.