பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2015

இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள்

2
1
கெவின் பீற்றர்சன் கிரிக்கெட் பவுண்டேசனினால் நடத்தப்படும் துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான அணி நேற்று முன்தினம் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நடப்பு வருடத்தில் வடமாகாணத்தில் இடம் பெற்ற முரளி கிண்ணத் தொடரில் சிறந்த பெறுபேற்று வெளிப்படுத்திய 12 வீரர்கள் ஒரு அணியாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதில் வவுனியா மாவட்ட இணைந்த அணியில் விளையாடிய கிரிதரன், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியில் விளையாடிய நிரோசன், யாழ். மாவட்ட இணைந்த அணியில் விளையாடிய தசோபன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் இணைந்த அணியில் விளையாடிய நிதுசன் ஆகிய நான்கு தமிழ் வீரர்களுமே குறித்த தொடருக்கான இலங்கை அணியில் இடம் பெற்றவர்களாவர்.
நேற்று முன்தினம் டுபாய் சென்ற இந்த அணி 26ஆம், 27ஆம் 28ஆம் திகதிகளில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும். பின்னர் இந்தமாதம் 30ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ரி-20 தொடரில் கலந்துகொள்ளும். தொடரில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.