பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2015

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அவ்வாறே தொடரும்: இரா.சம்பந்தன்


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கு தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைகளின் விடுதலை தொடர்பில் தமது நடவடிக்கைகள் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
கொழும்பு - மெகஸின் சிறைச்சாலையிலுள்ள 136 அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் மஹேந்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.