பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2015

தாயார் மாரியம்மாள் உடல் அடக்கம்: வைகோ கண்ணீர்: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல்







ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாய் வை.மாரியம்மாள் (வயது 96), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (06.11.2015) காலமானார். இதையடுத்து, மாரியம்மாள் உடல் திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள  அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு தமிழக அரசியல் கட்சித்  தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். 
 
பின்னர் மாரியம்மாள் உடல் சனிக்கிழமை வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கலிங்கப்பட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.