பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2015

யாழ்ப்பாணம், கச்சேரிக்கு அருகில் உள்ள ரயில் பாதுகாப்பற்றகடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயில், குறித்த ரயில் கடவைக்கு அருகில் வைத்து காரொன்றுடன்மோதியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 1. 30 மணியளவில்இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான காரில், நான்கு பேர் பயணித்திருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 41 வயதுடைய பொறியிலாளர் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ரயில் வருவதை பொருட்படுத்தாமல் கச்சேரி-நல்லூர் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை குறித்த கார் கடக்க முற்பட்டபோது விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் கச்சேரி-நல்லூர் வீதி புகைவண்டி கடவைக்கு பாதுகாப்பு கடவை இல்லாமையினாலேயே விபத்து சம்பவித்ததாகவும், ரயிலில் எச்சரிக்கை ஒலி எழுப்பவில்லை எனவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அப்பகுதியில் சமிக்ஞை ஒளி காட்டி மாத்திரமே இருந்துள்ள போதிலும், அதுவும் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழையினால்சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்