பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2015

வட மாகாண இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்!- சமந்தாவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை


வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பிற்காக பாரியளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையை, வட மாகாண முதலமைச்சர் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர், வட மாகாணத்திற்காக விஜயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வட மாகாண முதலமைச்சரை இன்று முற்பகல் அவர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.