பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2015

புழுக்கள் நிறைந்த அரிசி மா பைக்கட்! அதிர்ச்சியில் பாவனையாளர்



யாழ்.தெல்லிப்பழை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அரிசி மா பொதி ஒன்றில் புழுக்கள் நிறைந்திருந்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி
பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது்
தெல்லிப்பழை பகுதியில் உள்ள கடையொன்றில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இடியப்பம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பொதியில் அடைக்கப்பட்ட குறித்த மாப்பொதியை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அம் மாப்பொதியை வீட்டில் வைத்து சமைப்பதற்காக திறந்த போதே அதனுள் புழுக்கள் நிறைந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
எனினும் குறித்த மாப்பொதியானது காலாவதியாவதற்கு இன்னமும் திகதி இருந்துள்ளது.
இந்நிலையிலேயே பாவனையாளர் குறித்த சம்பவம் தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறையிட்டுள்ளனர்..
..................