பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2015

இராணுவத்தினர் கைது செய்யப்படுவதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம்


இராணுவத்தினரை அசாதாரண முறையில் கைது செய்வதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஹோமாகம தினச் சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை தேசிய சுதந்திர முன்னணி ஒழுங்கு செய்துள்ளது.
பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இராணுவத்தினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் போது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய இராணுவத்தினரை கைது செய்வதை நிறுத்துமாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
களுத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்ததோடு, இந்த நியாயமற்ற செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என கோரியதுடன், இராணுவ வீரர்கள் அசாதாரண முறையில் கைது செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.