பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2015

மாவீரர் நாள் விளக்கு எரியும் : யாழ்.பல்கலையில் வாசகம்

யாழ்.பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

குறித்த சுவரொட்டிகளில் பின்வருமாறு வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும், எழுதப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மறவர் படையின் புனித நாள், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம், மாவீரர் நாள் விளக்கு எரியும், தமிழனின் வீரம் காத்தீர் தமிழனின் மானம் காத்தீர் தமிழனை உலகறியச் செய்தீர் வீண்போகாது உங்கள் தியாகம் விதைக்கப்பட்ட வீரர்களுக்கு எங்கள் வீரவணக்கம் போன்ற வீர வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றது.