பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2015

பரந்தனில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு


கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை நேற்று மாலை 37 வயதுடைய, சிறுமியின் சகோதரியின்  கணவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.