பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2015

மஹிந்த அணியின் 15பேர் அரசாங்கத்துடன் இணைவர்: எஸ்.பி.திஸாநாயக்க

மஹிந்த ராஜபக்ஸ அணியிலிருந்து   சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவர் என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய அவர் எந்தவித எதிர்ப்பார்ப்புக்களும் இன்றி இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 15 பேரில் 6 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதே வேளை மஹிந்த அணியின் மற்றும் ஒரு குழுவினர் அதிலிருந்து விலகி மாற்றுக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை எல்லை நிர்ணயம் தொடர்பில் பல நூற்றுக்கணக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால் உள்ளூராட்சி தேர்தல் திகதி பிற்போடப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.